நிகழ்ச்சித்திட்ட வரவுசெலவுத்திட்டம் – 2026

சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான நிகழ்ச்சித்திட்ட வரவுசெவுத்திட்டம் கடந் 18.11.2025 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சபையின் தவிசாளர் தி.கிருஸ்னவேணி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்போது குறித்த பாதீடு வாக்கெடுப்பு எதுவுமின்றி சபை உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் குறித்த பாதீடு பொதுமக்களின் அபிப்பிராயத்தினை பெறும்பொருட்டு சபையின் தலைமை அலுவலகம் மற்றும் உப அலுவலகம் பொதுநூலகங்கள் ஆகியவற்றில் 24.11.2025 தொடக்கம் 03.12.2025 வரை பொதுமக்கள் பார்வைக்கபாக வைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குறித்த பாதீட்டினை பார்வையிட்டு தங்களது கருத்துக்களை எழுத்துபூர்வமாக சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். பாதீட்டு வரைவினை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

முன்பள்ளி விளையாட்டு போட்டி

வவுனியா வடக்கு பிரதேச சபை முன்பள்ளி விளையாட்டுப்போட்டி 06.11.2025 அன்று முன்பள்ளி வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி, முன்னாள் முன்பள்ளி உதவிக்கல்விப் பணிபாளர் திரு த.இராஜேஸ்வரன், சபையின் கொளரவ உறுப்பினர்கள், சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்