தகவலறியும் உரிமை தொடர்பான விபரணம்
தகவலறியும் உரிமை என்றால் பகிரங்க அதிகாரசபைகளிடம் தமக்கு வேண்டிய தகவல்களை அறிந்துகொள்ள பொதுமக்களுக்குள்ள உரிமை தகவல் அறியும் உரிமை ஆகும். இது இலங்கையின் அரசியல் யாப்பின் 19ஆவது சீர்திருத்தத்தில் தகவலறியும் உரிமை (பிரிவு 14அ) உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அதன் படி 2016 ஆம் ஆண்டு 12ஆம் இலக்க தகவலறியும் உரிமை சட்டம் உருவாக்கப்பட்டது.
‘தகவல் உத்தியோகத்தர்’
பொதுமக்கள் பகிரங்க அதிகாரசபையில் தமது முதல் தகவல் கோரிக்கையை முன்வைக்க வேண்டிய அலுவலகர் தகவல் உத்தியோகத்தர் ஆவார். அவர் தகவல் கோரிக்கையினை ஏற்று உரிய நேரத்தில் பதிலளிப்பதற்கும் உதவிகளை வழங்குவதற்கும் பொறுப்புடையவர்.
‘குறித்தளிக்கப்பட்ட அதிகாரி’
தகவல் உத்தியோகத்தரிடமிருந்து கிடைக்கும் பதில் திருப்தியளிக்காதபோது அல்லது பதில் கிடைக்காதபோது, குறித்தளிக்கப்பட்ட அதிகாரியிடம் மேன்முறையீட்டை செய்யலாம்.
‘பகிரங்க அதிகாரசபைகள்’
அரசியலமைப்பு அல்லது அதன் கீழ் உருவாக்கப்பட்ட அரசாங்க அமைப்புகள், உள்ளூராட்சி சபைகள், நீதிமன்றங்கள் மற்றும் அரச நிதியுதவி பெறும் நிறுவனங்கள் ஆகியவை பகிரங்க அதிகாரசபைகள் ஆகும்.
தகவலறியும் உரிமை கோரிக்கையை விடுத்தல்
இலங்கை குடிமக்கள் தகவலறியும் உரிமை கோரிக்கையை RTI 1 படிவம் மூலமாகவோ அல்லது சாதாரண எழுத்து மூலம் விண்ணப்பிக்கலாம்.
விலக்கப்படக்கூடிய தகவல்கள்
- தனிப்பட்ட / தனியுரிமை தகவல்கள்
- தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்கள்
- நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் தகவல்கள்
- வர்த்தக ரகசியங்கள்
- மருத்துவ தனியுரிமை தரவுகள்
- நீதிமன்ற வழக்குகளை பாதிக்கும் தகவல்கள்
- பரீட்சை பாதுகாப்பு தகவல்கள்
- தேர்தல் இரகசிய தகவல்கள்
- ஆணைக்குழுவில் தீர்ப்பாகாத அமைச்சரவை ஆவணங்கள்
மேன்முறையீட்டு நடைமுறை
- தகவல் உத்தியோகத்தரின் பதிலில் திருப்தியடையாதால் 14 நாட்களுக்குள் குறித்தளிக்கப்பட்ட அதிகாரியிடம் முறையிடலாம்.
- அவரது பதிலிலும் திருப்தியில்லையெனில் 2 மாதங்களுக்குள் தகவலறியும் உரிமை ஆணைக்குழுவிடம் முறையிடலாம்.
மேலதிக விபரங்களுக்கு RTI சட்டத்தினை வாசிக்க: இங்கே அழுத்தவும்
